நித்யானந்தர் எனது பார்வையில்....

Thursday, March 4, 2010


   காட்சி ஊடகங்களுக்கு நல்ல தீணி கிடைத்திருக்கிறது.  காட்சி ஊடகங்களின் ரசிகர்களுக்கு அதைவிட கூடுதல் உற்சாகம். திரையரங்குக்குச் செல்லாமலே நீல படம் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. எல்லாம் நித்யானந்த சுவாமிகள் செய்த புண்ணியம்.

    நித்தியானந்தர் செய்தது சரியா?, தவறா? என டீக்கடைகள் தோறும் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.  சாமியார் என்றாலும் பாதிரியார் என்றாலும் இந்திரலோகத்தில் இருந்தோ அல்லது பரலோகத்தில் இருந்தோ பூலோகத்துக்கு குதித்துவந்தவர்களா?.    தாயின்  வயிற்றில் கருவாய் உருவாகி, அதிகபட்சம் ஒன்பரை மாதங்கள் உள்ளேயே வளர்ந்து குழந்தையாய் பிறந்தவர்கள் தானே?.

       சாமியார்களும் மனிதர்கள்தான் என்பதை மறந்து, அவர்களை கடவுளின் மறுவுருமாகவே வழிபடும் பக்தர்கள் இருக்கும் வரை ஒரு நித்தியானந்தர் அல்ல ஓராயிரம் நித்தியானந்தர் தோன்றிக்கொண்டே இருப்பதை யாராலும் தடுக்க இயலாது.
 

   இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், இன்பம் வரும்போது கடவுளை துதிக்கும் பக்தர்கள், துன்பம் வரும்போது இதுபோன்ற நித்தியானந்தர்களை அணுகுகின்றனர்.  பக்தர்களின் குறிப்பாக பெண் பக்தர்களிடம் இன்ப, துன்பங்களை அறிந்து, அவர்களுக்கு சகலவித ஆசி வழங்குகின்றனர் சாமியார்கள்.

    கருவறை முதல் படுக்கைஅறை வரை ஆசி வழங்குகின்றனர் சாமியார்கள். கருவறைக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால், படுக்கையறைக்கு செல்லும்போது பெண் பக்தர்கள் யோசிக்க வேண்டாமா?. ஒருமுறை சென்றால் தவறுதலாக அல்லது மிரட்டப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டதாக கருதலாம். ஆனால், இதுபோன்ற போலி மடங்களில் காமிரா கண்களில் சாமியார்களுடன் சிக்கும் பெண்கள் பலமுறை செல்பவர்களாகத்தானே இருக்கிறார்கள்.


   நித்யானந்தர் மீது ஒரு வழக்கு போட்டால், இதுபோன்ற பக்தர்கள் மீது ஆயிரம் வழக்கு போட வேண்டும். அப்போது தான் பக்தர்கள் திருந்துவார்கள். பக்தர்கள் திருந்திவிட்டால் சாமியார்கள் தானாக திருந்திவிடுவார்கள்.   இறைவன் ஒருவர் இருக்கிறார் என்றால் அவரிடம்  நேரடியாக பேசுங்கள். அவரிடம் பேசுவதற்கு இடைத்தரகரை நாடுவது ஏன்?

   நித்யானந்தரா இப்படி செய்துவிட்டார் என அவரது பக்தர்களுக்கு மட்டுமல்ல. பலருக்கும் அதிர்ச்சி. ஆனால், அவரும் மனிதர் தான் என்பதை மக்கள் மறந்தது ஏனோ?.

இயற்கையை செயற்கையால் கட்டுப்படுத்த இயலாது என்பது இயற்கை கோட்பாடு. பெண்ணாசை வருவது இயற்கை. சாமியார் வேசம் என்பது செயற்கை. இப்போது மீண்டும் ஒருமுறை ஆழமாக யோசித்து பாருங்கள். இயற்கையை செயற்கையால் கட்டுப்படுத்த இயலாது.